எனக்கு பிடித்த வீரர் விராட் கோஹ்லி தான்!

16

 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தான் உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்த துடுப்பாட்ட வீரர் என்று பாகிஸ்தான் இளம் வீரரின் மனைவி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் ஹசன் அலி. இவர், 2019 உலகக் கோப்பைத் தொடருக்கு பிறகு, இந்தியாவைச் சேர்ந்த ஷாமியா அர்சோவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ்களுடன் சாட் செய்த ஷாமியா, ரசிகர் ஒருவரின் ‘பேவரைட் பேட்ஸ்மேன் யார்?’ என்ற கேள்விக்கு விராட் கோஹ்லி என்று பதில் அளித்துள்ளார்.

கணவர் ஹசன் அலி பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனம் திறந்து கோஹ்லியைத் தான் பிடிக்கும் என்று கூறியிருப்பதற்கு வழக்கம் போல் ஆதரவு, எதிர்ப்பு என்று மாறி மாறி கிளம்பியுள்ளது.

SHARE