புலம்பெயர் உறவுகளால் கையளிக்கப்பட்ட 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு

90

9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு வழங்குவதற்காக புலம்பெயர் உறவுகளால் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரம் பிரதேசத்தை சேர்த்த 3 குடும்பங்கள் குறித்த நிதியை வழங்கியுள்ளதுடன், அவற்றை உலருணவு பொதிகளாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குமாறு கையளித்துள்ளனர்.

குறித்த உலருணவுகள் பொதிகளாக்கப்பட்டு இன்று(வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஜீவராசா தெரிவித்தார்.

       

SHARE