ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ள கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர்கள்

43
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய, நியமிக்கப்படவுள்ள உயர் பதவிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பதவிகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழு முழுமையாக செயற்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE