சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

61
பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலணி பகுதியில் உள்ள வீடொன்றின் ஜன்னலை உடைத்து உட்புகுந்து  வீட்டில் இருந்த இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நல்லூர்பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரை நேற்று(புதன்கிழமை) கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து திருடப்பட்ட இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

SHARE