வாளை வாயில் வைத்து ரிக் ரொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞன் கைது

53
வாள் ஒன்றினை வாயில் வைத்து ரிக் ரொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

SHARE