தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டினருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை – பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

49

வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பிரான்சுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது அவுஸ்ரேலியா, இஸ்ரேல், ஜப்பான், நியூஸிலாந்து சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு மட்டுமே பொருந்தும்.

அதேசமயம் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE