இலங்கை வீரரை கட்டியணைத்து நிறுத்திய க்ருணல் பாண்ட்யா!

12

 

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் தொடரில், க்ருணல் பாண்ட்யாவின் செயல்பாடு ரசிகர்கள் பலரையும் கடும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கோஹ்லி தலைமையிலான அனுபவமிக்க வீரர்கள், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளதால், இந்தியாவின் இளம் அணியை, டிராவிட் வழிநடத்துகிறார்.

இந்த அணிக்கு ஷிகார் தவான் தலைமை தாங்குகிறார். இந்நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி, இன்று கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது

அதன் படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சாமிகா கருணரத்னே 43 ஓட்டங்களும், தசுன் சனக்கா 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், யுவேந்திர சஹால், மற்றும் தீபக் சஹார் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து இந்திய அணி ஆடி வருகிறது.இந்நிலையில், ஆட்டத்தின் 22-வது ஓவரை க்ருணல் பாண்ட்யா வீசிய போதுஅப்போது நான் ஸ்டிரைக்கர் எண்ட்டில் நின்று கொண்டிருந்த இலங்கை வீரர் Asalanka ஓடி முற்பட்டு, அதன் பின் பேட்டை கிரிஸ் பக்கம் திருப்பினார்.

உடனே அந்த பந்தை கீழே விழுந்து பிடித்த க்ருணல் பாண்ட்யா, அவர் மீது விழவே, உடனடியாக எழுந்த அவர், Asalanka-வை கட்டியணைத்தார்.

இதுவே எப்போது இருக்கும் க்ருணல் பாண்ட்யாவாக இருந்தால், கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் இன்று அவர் மிகவும் பொறுமையாக, சிரித்த முகத்துடன் அவரை கட்டியணைத்து நிறுத்தியது, ரசிகர்கள் பலருக்கும் ஆச்சியமாக இருந்தது.

இதற்கு எல்லாம் காரணம், தலைமை தான், டிரவிட் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பதால், அவர் சொல்லிக் கொடுத்த பாடம் தான் இது, ஒழுக்கத்தின் அடையாளம் என்று டிராவிட்டை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

SHARE