8வது வீரராக களமிறங்கி அதிரடி சதம்!

13

 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், எட்டாவது வீரராக களம் இறங்கி சதம் விளாசி அயர்லாந்து ஆல்ரவுண்டர் சிமி சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் பிறந்து அயர்லாந்து நாட்டில் குடிபெயர்ந்தவர் சிமி சிங். கிரிக்கெட் வீரரான அவர் அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

நேற்று முன் தினம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்காக எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சதம் விளாசி சாதித்தார் சிமி சிங்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய எந்தவொரு பேட்ஸ்மேனும் சதம் பதிவு செய்தது இல்லை.

மொத்தம் 91 பந்துகளில் 100 ரன்களை எடுத்த சிமி சிங் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இருப்பினும் இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

SHARE