உலகக்கோப்பையில் இந்த இரண்டு அணியின் சேட்டை எங்களிடம் செல்லாது

12

 

மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரன் பொல்லார்ட் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய பின்பு உலகக்கோப்பை டி20 குறித்து பேசியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இதில் மேற்கிந்திய தீவு அணி 3 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது.

இதில் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி, நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவிக்க, அதன் பின் ஆடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இதன் மூலம் மேற்கிந்திய தீவு அணி 4-1 என்று தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

இது குறித்து மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிரன் பொல்லார்ட் கூறுகையில், தென் ஆப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களின் மூலம், இரு அணிகளும் எப்படி விளையாடும் என்ற ஐடியா எங்களுக்கு கிடைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணையில் தென் ஆப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணி நாங்கள் இடம்பெற்றுள்ள குழுவில் உள்ளதால் இரு அணிகளை பற்றி தற்பொழுதே தெரிந்து வைத்து கொள்வது சிறந்தது தான்.

பலம் பலவீனங்களை தெரிந்து கொண்டால் தான் எங்களை நாங்கள் முன்னேற்றி கொள்ள முடியும். மேற்கிந்திய தீவு அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் நிக்கோலஸ் பூரணுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடர் வெற்றியை சிறப்பாக கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.

SHARE