சாலையில் நடந்த கோர சம்பவம்: ஹெலிகொப்டரில் கொண்டு செல்லப்பட்ட குழந்தை

8

 

கிளாரிங்டன் பகுதியில் நடந்த கோர விபத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன், அவர்களுடன் பயணித்த குழந்தை ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

பிரதான சாலை 401ல் மேற்கு நோக்கி செல்லும் பகுதியில் திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முன்பு இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் ஒன்றின் மீது பலமாக மோதிய வாகனத்தில் சாரதி உட்பட முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சம்பவயிடத்தில் பலியாகியுள்ளனர்.

இவர்களுடன் பயணித்த குழந்தை ஒன்று, பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் காயங்களுடன் மீட்கப்பட்டு, ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வெளியிடப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

SHARE