சர்ஜரி செய்த தொகுப்பாளினி அர்ச்சனாவின் நிலைமை எப்படி உள்ளது?

13

 

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் இப்போது உள்ளார்கள். புதிய பிரபலங்களை நாம் அதிகம் வரவேற்றிருக்கிறோம், ஆனால் 90களில் சிலரே இருந்திருக்கிறார்கள்.

அப்படி அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடிய தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. அன்றிலிருந்து அர்ச்சனா தொடர்ந்து தொலைக்காட்சிகளில் மாறி மாறி தனது பணியை செய்து வருகிறார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியிலேயே Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

இந்த நேரத்தில் தான் அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் மூளை பக்கத்தில் ஒரு ஓட்டை இருப்பதாகவும் அதனால் தனக்கு சர்ஜரி நடக்கப்போவதாகவும் அவர் பதிவு போட எல்லோரும் அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என பிராத்தனை செய்து வந்தனர்.

இப்போது அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து நல்ல படியாக வீடு திரும்பியுள்ளதாகவும் விரைவில் உங்களை சந்திப்பார் என்றும் அவரது மகள் சாரா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

SHARE