பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்

12

 

இனவெறி தாக்குதல் நடந்ததால் ஜேர்மனி கால்பந்தாட்ட வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகின்றது.

இதில் பங்கேற்கவுள்ள வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி பயிற்சி ஆட்டம் ஒன்றில், ஜேர்மனி அணி ஹோண்டுராஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.

அப்போது ஜேர்மனி அணி வீரர்கள் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பானது.

இந்நிலையில் தங்கள் அணியை சேர்ந்த ஜோர்டன் டொரனாரிகா என்ற வீரர் மீது இனவெறி தாக்குதல் நடந்ததால், அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE