நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதி படம்-

7

 

கொரோனா நோய் தொற்று காலம் ஏற்பட்டதில் இருந்து சினிமா துறை மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது. படங்களுக்கு மட்டும் தடைகளை அதிக நாட்கள் இருந்தன.

ஆனால் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அவ்வளவாக பிரச்சனைகள் இல்லை. திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் நிறைய முன்னணி நடிகர்களின் படங்கள் OTT தளங்களில் வெளியாகி வருகின்றன.

அதில் படம் ரிலீஸ் ஆகி நிறைய படங்கள் வெற்றியும் கண்டுள்ளது. அப்படி தற்போது விஜய் சேதுபதியின் ஒரு படம் OTT தளத்தை விட நேரடியாகவே தொலைக்காட்சியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அது என்ன படம் என்றால் விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் படம் சன் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறதாம்.

படம் ஒளிபரப்பாக இருக்கும் நேரம் மட்டும் இன்னும் உறுதியாகவில்லை.

 

SHARE