இறுதி வரை போராடி இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை அணி!

8

 

இலங்கையை இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வீழ்த்திய நிலையில் இறுதிவரை வெற்றிக்காக போராடிய இலங்கை அணி வீரர்களை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது.

இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அனி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இந்தியா 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றது.

கடைசி வரை போராடியே இலங்கை அணி தோல்வியடைந்தது. இதன்பின்னர் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெல்டன் பாய்ஸ், அருமையான போட்டி.

கடைசி வரை போராடிய இந்த விடயம் தான் நமக்கு வேண்டும், அடுத்த போட்டியை வெல்லுங்கள் என இலங்கை அணியை ஊக்கப்படுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.

 

SHARE