இலங்கையின் தோல்வியால் கடும் கோபத்தை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

9

 

 

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்ததால், அந்தணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கிடையே முதல் ஒருநாள் போட்டி முடிந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியாவை, தீபக் சஹார் தன்னுடைய அதிரடி ஆட்டம் மூலம் வெற்றியைத் தேடித்தந்தார்.

ஒரு கட்டத்தில், 193 ஓட்டங்களுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்ததால், இலங்கையின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் இலங்கை பந்து வீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் சொதப்பியதால், அது இந்தியாவின் பக்கம் சென்றது.

இதனால் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், கடைசி 5 ஓவர்களி, இலங்கை அணியின் செயல்பாட்டைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார்.

அவ்வப்போது தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்தினார். இறுதியில் தோல்வியடைந்த பின்பு, அவர் டிரஸிங் ரூமிற்குள் சென்று, அங்கு யாரிடமோ தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

SHARE