வட மத்திய மாகாணம் உட்பட நாட்டின் பலபகுதிகளில் பரவும் தோல் நோய்

13

 

வட மத்திய மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தோல் நோய் பரவுவது குறித்து சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகூன் இது தொடர்பில் தகவல் வழங்குகையில்,

ஒரு பூஞ்சையால் ஏற்படும் TINEA (டின்யா) என இந்த தோல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள், மருந்துகளுக்கு ஒவ்வாமை, சுய மருந்துகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆகியவை தொற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லா வயது பிரிவின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் கூறியுள்ளார்.

நோயிலிருந்து மீள சுமார் ஆறு மாதங்களுக்கு மருத்துவ ஆலோசனையின் கீழ் சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார், இல்லையெனில் தொற்று மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

SHARE