விற்பனையில் அசத்தும் போக்கோ ஸ்மார்ட்போன்!

63

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 20 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாகியுள்ளதாக போக்கோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆன்லைனில் அதிகம் விற்பனையாகும் சி3 தொடர்ந்து பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் போக்கோ சி3 (3 ஜிபி + 32 ஜிபி) விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இதில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா, டூ-டோன் டிசைன், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங், ஸ்பிலாஷ் ப்ரூப் P2i கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

SHARE