ஒரே போனில் மூன்று Whatsapp எப்படின்னு தெரியுமா?

79

 

பொதுவாக ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு அல்லது மூன்று வாட்ஸ்ஆப் கூட மிக எளிமையாக பயன்படுத்த முடியும், அதற்கு தகுந்த பல்வேறு ஆப் வசதிகள் ஆன்லைனில் உள்ளது.

தற்போது  ஒரே போனில் மூன்று வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படியென்று பார்ப்போம்.

  • முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் வழியாக NoxApp+ -எனும் செயலியை பதிவிறக்கம் செய்தல் வேண்டும்,பின்பு அந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யவும்.
  • அடுத்து இந்த செயலியில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து அப்ளிக்கேஷன்களும் காண்பிக்கப்படும், அதில் உங்கள் விருப்பான செயலியை தேர்வு செய்து clone- செய்ய முடியும். அதன்படி நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை மிக எளிமையாக clone செய்யமுடியும்.
  • NoxApp+ செயலியில் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை தேர்வு செய்தபின்பு create multi app எனும் ஆப்ஷனை கிளிக் செய்தல் வெண்டும்.
  • அடுத்து NoxApp+ பகுதியில் உங்கள் இரண்டாவது வாட்ஸ்ஆப் இடம்பெறும், அவற்றில் உங்களின் புதிய மொபைல் எண் பதிவிட்டு பயன்படுத்த முடியும். பின்பு இந்த NoxApp+ -இருக்கும் இரண்டாவது வாட்ஆப் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனின் முன்பகுதிக்கு எளிமையாக கொண்டுவர முடியும், அதற்கு create shortcut எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்
  • மேலும் NoxApp+ செயலியில் மூன்றாவது வாட்ஸ்ஆப் கூடclone முறையில் பயன்படுத்த முடியும், பின்பு இந்த செயலியில் பேட்டன் லாக் வசதி உள்ளது.
SHARE