ஸ்டீவ் ஜாப்ஸின் பணி விண்ணப்ப படிவம்! இத்தனை கோடிக்கு ஏலம் போனதா?

76

 

மறைந்த தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 18 வயதில் பயன்படுத்திய பணி விண்ணப்ப படிவம் 2.5 கோடி ரூபாய்க்கு(இந்திய மதிப்பில்) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு தனது 56வது வயதில் காலமானார். இந்நிலையில் அவர் பயன்படுத்திய பழமையான பொருள்கள் அவ்வப்போது ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன.

தற்போது ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 18வது வயதில் பணி வழங்கக் கோரி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

ஸ்டீவ் ஜாப்ஸ் அனுப்பிய இந்த படிவத்தில் அவரது முகவரி, அலைபேசி எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்டீவ் ஜாப்ஸ் தனது வாழ்நாளில் வேலை கோரி அனுப்பிய ஒரே விண்ணப்பப் படிவமான இது 3.43 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 54 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.

SHARE