M.குமரன் S/O மகாலக்ஷ்மி திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி !

12

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

வரிசையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதி செம பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் லாபம் திரைப்படம் திரையரங்கிலும், துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியிலும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் 2004-ல் வெளியான M.குமரன் S/O மகாலக்ஷ்மி திரைப்படத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அப்படத்தில் தான் ஓரமாக நின்று கொண்டு இருந்ததாகவும், அதனால் அப்படத்தில் அதிகமாக தெரிந்திருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

SHARE