கங்குலி கிட்ட இருந்த அணி… கோலி கிட்ட கிடையாது!

14

 

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, கங்குலி தலைமையில் இருந்த இந்திய அணி மற்றும் கோலி தலைமையில் இருந்து வரும் இந்திய அணியைப் பற்றி பேசியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ஆட்டம் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. இதனால், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே இந்தியாவை பாராட்டி வருகிறது.

இருப்பினும், தற்போது இருக்கும் இந்திய அணிக்கும், கங்குலி இருந்த போது இருந்த இந்திய அணிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கங்குலி தலைமையிலான இந்திய அணி இருந்த போது, சச்சின், டிராவிட், சேவாக், லட்சுமணன் போன்ற சர்வதேச பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அவர்கள் எளிதாக எதிரணியின் பந்து வீச்சை சமாளித்தனர்.

ஆனால், அதே போன்று இப்போது இந்திய அணியில் இருக்கிறதா என்றால், நான் இல்லை என்று தான் கூறுவேன். கோஹ்லி, ரோகித்தை தவிர மற்ற வீரர்கள் அந்தளவிற்கு அபாயகரமான வீரர்களாக தெரியவில்லை.

இருப்பினும் கோலி அணி வெளிநாட்டில் சாதிப்பதற்கு முக்கிய காரணம், பந்து வீச்சாளர்கள் தான், இந்திய அணியில் தற்போது சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

SHARE