கொரோனா பாதித்த ரவி சாஸ்திரி உடல்நிலை எப்படி இருக்கிறது?

16

 

கொரோனா பாதித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

4-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் பின் மான்செஸ்டரில் மேலும் ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்திய அணி வீரர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என உறுதியானது. தற்போது, ஐபிஎல் தொடரில் விளையாட இந்திய வீரர்கள் இங்கிலாந்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்துள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் தனிமைப்படுத்தலில் உள்ள ரவி சாஸ்திரிக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட lateral flow பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

SHARE