இங்கிலாந்து 2008-ல் செய்ததை நாம் மறக்க கூடாது! இந்த டெஸ்ட் நடக்கனும்: பழசை ஞாபகப்படுத்திய கவாஸ்கர்

16

 

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பேசியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.இறுதியாக கடந்த 10-ஆம் திகதி நடைபெறவிருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளரான பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட, அதைத் தொடர்ந்து பிசியோ Yogesh Parmar-க்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட இந்த போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த போட்டி காரணமாக இங்கிலாந்திற்கு 40 மில்லியன் பவுண்ட் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

இதை எப்படியாவது ஈடு செய்ய வேண்டும் என்பதற்காக, பிசிசிஐ அடுத்து ஆண்டு இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு வந்து மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதால், அப்போது இந்த மீதமிருக்கும் டெஸ்ட் போட்டியை வைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடந்த போது, இங்கிலாந்து அணியின் அப்போதைய கேப்டன் ஆன, கெவீன் பீட்டர்சன் தன்னுடைய அணியை அழைத்து வந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார்.

அப்போது அவர்கள் நினைத்திருந்தால், பாதுகாப்பை காரணம் காட்டி நிறுத்தியிருக்கலாம், ஆனால் அதை செய்யவில்லை. எனவே இதை நாம் மறக்க கூடாது, இந்த போட்டி எப்படியாவது நடந்து ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE