தாண்டிக்குளம், கொக்குவெளி இராணுவமுகாம் முன்பாகஇராணுவ பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து –

12

 

வவுனியா- தாண்டிக்குளம், கொக்குவெளி இராணுவமுகாம் முன்பாக முச்சக்கரவண்டியுடன் இராணுவ பேருந்து மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக இன்று (13.09) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த இராணுவ பேருந்து கொக்குவெளி இராணுவ முகாமிற்குத் திரும்ப முற்பட்ட வேளை, எதிர்த்திசையில் வவுனியா நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளார். விபத்து இடம்பெற்ற நிலையில் சிறிது நேரத்தில் இராணுவத்தினர் விபத்துக்குள்ளான இராணுவத்தின் பேருந்தினை இராணுவ முகாமிற்குள் எடுத்துச் சென்றதுடன், முச்சக்கரவண்டியினை வீதியோரத்தில் நீண்ட நேரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE