மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்!

12

 

மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நியமனம் செப்டம்பர் மாதம் 15ம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் அஜித் நிவார்ட் கப்ரால் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பட்டய கணக்காளரான இவர் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராக சுமார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE