தல்லியத்த, தொரவக்க பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

11

 

கேகாலை மாவட்டம், வரக்காப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்லியத்த, தொரவக்க பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தல்லியத்த, தொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE