வார இறுதியை கொண்டாட சென்ற கனேடிய குடும்பம்… உடல் கருகி சடலமான துயரம்

12

 

கனடாவின் நோவா ஸ்கோடியாவில் வார இறுதியை கொண்டாட சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோவா ஸ்கோடியாவின் Amherst பகுதியை சேர்ந்த 6 பேர்கள் கொண்ட குடும்பமே பயணத்திற்கான டிரெய்லரில் தீ விபத்து ஏற்பட்டு உடல் கருகி பலியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சுமார் 6.30 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், சடலங்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மரணமடைந்தவர்களை உறவினர்களின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. R.J. Sears(30), Michelle Robertson(28), பிள்ளைகள் Madison(11), Ryder(8), Jaxson(4), மற்றும் 3 வயதான C.J. ஆகியோர்களே உடல் கருகி பலியானவர்கள்.முகாம் ஒன்று அமைத்து வார இறுதியை குறித்த குடும்பம் கொண்டாடியிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தீவிபத்து காரணமாகவே மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் தீ விபத்தால் மட்டும் மரணம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட விசாரணைக்கு பிறகு பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ ஆய்வுக்கு பின்னரே 6 பேர்கள் கொண்ட அந்த குடும்பத்தினரின் மரண காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எந்த ஆதாரமும் இழந்துவிடாமல் இருக்க பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE