ஐபிஎல்… சென்னைக்கு விழுந்த பெரிய அடி! இந்த வீரர்கள் விளையாடுவது கஷ்டம்

14

 

ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர்கள் சில காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவர்கள் விளையாடுவது கஷ்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வாரம் 19-ஆம் திகதி முதல் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியிலே மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ளன.

இதற்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர்களான டுவைன் பிராவோ மற்றும் பாப் டூபிளிசிஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரீபியன் லீக் தொடரில் விளையாடியதன் காரணமாக இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதே போன்று பிளே ஆப் சுற்றில் சாம் கரண் மற்றும் மொயின் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இந்த இருவரும் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிக்காக இங்கிலாந்து அணியுடன் இணைய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணி இம்முறை கோப்பையை கைப்பற்றுமா என்ற சந்தேகம் இப்போதே ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

SHARE