கோலி-டோனி இருவரில் யார் எப்படிப்பட்ட கேப்டன்?

15

 

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஆன ரவீந்திர ஜடேஜா டோனி மற்றும் கோலி கேப்டன் பதவி குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணிக்கு மூன்று வித ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்து அழகு பார்த்தவர் தான் டோனி, இவர் தலைமையில் விளையாடுவதற்கு பல வீரர்கள் இப்போது வரை காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி டோனி இந்திய அணிக்கு வந்த பின்பு, அவருடன் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸில் ஆடி வரும் ரவீந்திர ஜடேஜா டோனி மற்றும் கோலி கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.

ஏனெனில் கோலி தலைமையிலும் ரவீந்திர ஜடேஜா விளையாடி வருவதால், அவரிடம் இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர், டோனி மற்றும் கோலி இருவரும் வெவ்வேறு விதமாக கேப்டன்ஷிப் செய்பவர்கள்.

டோனியை பொறுத்தவரை மிகவும் அமைதியாக வழிநடத்துவார். அதுவே கோலி, ஆக்ரோசமாகவும் மற்றும் மைதானத்தில் ஒரு என்ர்ஜி பூஸ்ட் செய்யும் அளவிற்கு பாசிட்டிவாக பேசுவார்.

இருவருவே அவர் அவர்களுக்கு என்ன வருமோ அந்த முறையில் இந்திய அணியை வழிநடத்தி வருவதாக கூறியுள்ளார்.

 

SHARE