டோனியின் வேலை இது தான்… ஆஸ்திரேலியாவோட டெக்னிக்கை பயன்படுத்தும் கங்குலி:

16

 

உலகக்கோப்பை தொடரில் டோனியை ஆலோசகராக நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து கங்குலி முதன் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் வீரரான டோனி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் டோனியை இப்படி திடீரென்று அறிவிக்க என்ன காரணம் என்ற கேள்வி முன்னணி வீரர்கள் பலரும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து பிசிசிஐ தலைவரான கங்குலி கூறுகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது, அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் வாக் இதே போன்று தான் அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அவர் அப்படி ஆலோசகராக நியமிக்கப்பட்டது, அப்போது அந்தணிக்கு மிகவும் பலன் அளித்தது. டோனியும் அதே போன்ற பணியை தான் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு செய்யப் போகிறார்.

ஏனெனில் டி20-ஐ பொறுத்தவரை, இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் நிறைய சாதனைகளை படைத்துள்ளார். இதை எல்லாம் வைத்து நிறைய ஆலோசனைகளுக்கு பின்னரே அவரை நியமிக்க முடிவு செய்தோம்.

கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. மிகப் பெரிய தொடரின் போது இது போன்ற நியமிப்பது அந்தணிகளுக்கு அது மிகப் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

SHARE