டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவாரா?

16

 

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி, டிராவிட்டிடம் பயிற்சியாளர் குறித்து பேசினோமா? இல்லையா? என்பது குறித்து கூறியுள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் பதவி காலம், இந்த டி20 உலகக்கோப்பையோடு முடிவுக்கு வருவதால், அடுத்த இந்திய அணியின் பயிற்ச்சியாளருக்கான தேடல் நடைபெற்று வருகிறது.

இதனால், அடுத்து இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் தான் வரவேண்டும் என ரசிகர்கள், முன்னணி வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், டிராவிட்டிற்கோ இதில் ஆர்வம் இல்லை எனவும், அவர் National Cricket Academy-க்கே பயிற்சியாளர் ஆக விருப்பம் இருப்பதாக கூறப்பட்டது.

இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், பிசிசிஐ தலைவரான கங்குலி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இது குறித்து கூறுகையில், டிராவிட் இந்திய பயிற்சியாளருக்கான தேர்வில் ஆர்வம் காட்டவில்லை என்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் காரணமாகவே நாங்கள் அவரிடம் இது குறித்து பேசவில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் டிராவிட் பயிற்சியாளர் தொடர்பாக பரவி வரும் வதந்திக்கு கங்குலி முற்றி புள்ளி வைத்துள்ளார்.

SHARE