மலையகத்தில் கடும் மழை- ஆறு பெருக்கெடுப்பதனால் லெட்சுமி தோட்ட மக்கள் பாதிப்பு

31
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) 
மலையகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன்   ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதுடன் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் 27/09 காலை  ஸ்ரதன் பகுதியில் மண்மேட்டுடன்  மரமொன்று சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதி பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களினால் மண்திட்டு அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக  அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா அட்டன் வீதியிலும் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமையினால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் நோட்டன் காசல்றி கடை வீதிப்பகுதியில் மூங்கில் மரமொன்று மின்கம்பத்தின் மீது வீழ்ந்தமையினால் 16/09 இரவு முதல் குறித்த பகுதியில் மின் விநியோகம் தடைப்படிருந்த  நிலையில் நோட்டன் பிரிட்ஜ் மின்சார சபை ஊழியர்கள் திருத்தப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேலை  பொகவந்தலாவை லெட்சுமி மத்திய பிரிவில் கிளை ஆறு பெருக்கெடுத்தமையானால் தொழிலாளர்கள் மழை காலங்களில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் காசல்றீ  நீர்தேக்கத்தோடு இணையும் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவில் பிரதான வீதியை  ஊடறுத்து செல்லும் கிளை ஆறு நிறம்பி  பெருக்கெடுக்கின்றமையினால்  பிரதான பாதையில் மூன்று அடி உயரம் நீர் நிறம்புவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த வீதியில் பயணிப்பவர்கள்  பெரும் அசௌகரியத்திற்கு உள்ளானதுடன் கொழுந்து மூடைகளை தலையில் சுமந்துக்கொண்டு  பெண் தொழிலாளகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

குறித்த அற்றினை அகலப்படுத்த தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென லெட்சுமி தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE