விஸ்வாசம் முக்கியம்! கடைசி வரை விளையாடுவேன்: தோல்விக்கு பின் பேசிய கோலி

20

 

கொல்கத்தா அணிக்கெதிரான எலிமினேட்ட போட்டியின் தோல்விக்கு பின், கோலி விஸ்வாசம் மிகவும் முக்கியம் என்பதை கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில், கோலியின் பெங்களூரு அணியும், இயான் மோர்கனின் கொல்கத்தா அணியும் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஐபிஎல் தொடரோடு கோலி தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகிறார். ஆனால் ஒரு முறை கூட, கேப்டனாக அவர் கோப்பை வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில், தோல்விக்கு பின் பேசிய கோலி, தான் இளைஞர்கள் சுதந்திரத்துடன் ஆடும் சூழலை ஏற்படுத்த என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இந்திய அணியிலும் இதையே செய்திருக்கிறேன்.

என்னுடைய தலைமைக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், நான் என்னுடைய 120 சதவீதத்தை பெங்களூரு அணிக்காக கொடுத்திருக்கிறேன்.

ஒரு வீரராக தொடர்ந்து பெங்களூரு அணிக்கு விளையாடுவேன். என்னை பொறுத்தவரை விஸ்வாசம் என்பது மிகவும் முக்கியம், பிறர் பெரிதாக நினைக்கும் எந்த விஷயமும் என பெரிது கிடையாது, நான் கடைசியாக ஐபிஎல் விளையாடும் வரை பெங்களூரு அணிக்கு தான் விளையாடுவேன்.

வேறு எந்த அணிக்கும் ஆடமாட்டேன் என்று கோலி கூறியுள்ளார்.

SHARE