பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

16

 

களுத்துறை, தொட்டங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடவட்டகொட, தொடங்கொடவில் வசிக்கும் 54 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்று தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், குறித்த பெண் தனியாக வீட்டில் வசித்து வருவதாகவும், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை அடையாளம் கண்டதாகவும் பொலிஸார் கூறினர்.

தலையில் காயத்துடன் இரத்தம் வழிந்ததால், படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று பிற்பகல் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நீதவான் விசாரணைகளை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

 

SHARE