அசத்தல் அம்சங்களுடன் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்த சோனி

26
அசத்தல் அம்சங்களுடன் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்த சோனி

சோனி டபிள்யூ.எப். சி500
சோனி இந்தியா நிறுவனம் டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் தனித்துவம் மிக்க சவுகரிய அனுபவம் வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை, ஏராளமான கஸ்டமைசேஷன் வசதியுடன் வழங்குகிறது. இத்துடன் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது.
சோனி டபிள்யூ.எப். சி500
சோனி டபிள்யூ.எப். சி500 அம்சங்கள்
– 5.8 எம்.எம். டிரைவர் யூனிட்
– ஃபாஸ்ட் பேர்
– ஸ்விஃப்ட் பேர்
– ப்ளூடூத் 5
– டபிள்யூ.எப். சி500 பட்டன் மூலம் ஸ்மார்ட்போன் வாய்ஸ் அசிஸ்டண்ட் இயக்கலாம்
– அதிக தரமுள்ள பில்ட்-இன் மைக்ரோபோன்
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– ஒரு இயர்பட் மட்டும் பயன்படுத்தும் வசதி
– 10 மணி நேர பேக்கப், சார்ஜிங் கேஸ் சேர்த்தால் மொத்தம் 20 மணி நேர பேக்கப்
புதிய சோனி டபிள்யூ.எப். சி500 பிளாக், வைட், ஆரஞ்சு மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள் மற்றும் வலைதளங்களில் ஜனவரி 16 ஆம் தேதி  விற்பனைக்கு வருகிறது.
SHARE