இந்தியா – தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று

17
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கேப் டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் விராட் கோலி 79 ஓட்டங்களையும் புஜாரா 43 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ரபாடா 4 விக்கெட்களையும் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி, நேற்றைய ஆட்டநேர முடிவின்போது ஒரு விக்கெட்டை இழந்து 17 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.

SHARE