பட்ஜெட் விலையில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

23
பட்ஜெட் விலையில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ வை33டி
விவோ நிறுவனம் விவோ வை33டி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.58 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
8 எம்.எம். அளவில் மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் விவோ வை33டி பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
 விவோ வை33டி
விவோ வை33டி அம்சங்கள்
– 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜி.பி.யு.
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 11
– 50 எம்.பி. பிரைமரி கேமரா
– 2 எம்.பி. டெப்த் கேமரா
– 2 எம்.பி. மேக்ரோ கேமரா
– 16 எம்.பி. செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப் சி
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ வை33டி ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் மிட்-டே டிரீம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 18,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் முன்னணி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
SHARE