நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் பூஸ்டர் தடுப்பூசி

19
தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்- எச்சரிக்கை

ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்
ப்ரூசல்ஸ்:
உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. கொரோனாவின் உருமாறிய டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் ஆகியவையும் மக்களிடையே கடுமையாக பரவி வருகின்றன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசியையும் பல நாடுகள் அறிமுகம் செய்துள்ளன.
கோப்பு புகைப்படம்இந்நிலையில் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும் மற்றும் மக்களை சோர்வடைய வைத்துவிடும். இதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நாடுகள் இடைவெளிவிட்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
குறிப்பாக குளிர்காலத்தில் தடுப்பூசி செலுத்துவது பலனை தரும். பேக்ஸ்லோவிட் மற்றும் ரெமிடெஸ்விர் ஆகிய மருந்துகள் ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE