டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

19
புரோ கபடி லீக் - டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பெங்களூரு

டெல்லி வீரரை மடக்கிய பெங்களூரு அணி வீரர்கள்
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த இரண்டாம் போட்டியில் பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி ஆக்ரோஷத்துடன் விளையாடியது. இதனால் 61-22 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் டெல்லி அணி மூன்றாம் இடத்துக்கு பின்தங்கியது.
மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா அணிகள் மோதின. போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 36 -36 என்ற புள்ளிகள் பெற்று போட்டி டிராவில் முடிந்தது.
SHARE