ஓய்வுப் பெறும் தீர்மானத்தை மீளப் பெற்றார் பானுக ராஜபக்ஷ!

23
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானித்தை மீளப் பெற்றுள்ளார்.

பானுக ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடிதற்கு பிறகு, தான் ஓய்வு பெறும் எண்ணத்தை மாற்றியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உடற்தகுதி நியமங்களுடன் இனி விளையாட முடியாது என கடந்த 3ஆம் திகதி கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்திருந்த கடிதத்தில் பானுக ராஜபக்ஷ, குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து லசித் மாலிங்க உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் ஓய்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

தற்போது, பானுக ராஜபக்ஷ, ஓய்வு பெறும் தீர்மானித்தை மீளப் பெற்றுள்ளமை இரசிர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

30 வயதான பானுக ராஜபக்ஷ, இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் 89 ஓட்டங்களையும் 18 ரி-20 போட்டிகளில் 320 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

SHARE