மாஸ்டர் படத்தின் நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி

23
மாஸ்டர் படத்தின் நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி

மாஸ்டர்
விஜய் –  விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் நிறைவேற்றி வைத்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு திரையங்கில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம். கடந்த ஆண்டு அதிக முறை ட்வீட் செய்யப்பட்ட படமாக ‘மாஸ்டர்’ திரைப்படத்தை ட்விட்டர் நிறுவனம் அறிவிக்கப்பட்டது. இந்த படம் ரிலீஸாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனை அவர்களுடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தின் மேக்கிங் காட்சிகளை பதிவிட்டு மாஸ்டர் வெளியாகி ஓராண்டு நிறைவான சந்தோசத்தை வெளிபடுத்தியுள்ளார். இந்த பதிவு அவர்களின் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.
விஜய் - விஜய் சேதுபதிவிஜய் – விஜய் சேதுபதி
இப்படத்தை குறித்து சினிமா பிரபலங்கள் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
SHARE