நாட்டில் மீண்டும் கொரோனா அலையால் ஏற்படவுள்ள அபாய நிலை

21
நாட்டில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் கொரோனா அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் ஒமைக்ரொன் திரிபுடனான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒமைக்ரொன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது.

அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE