பிராந்திய செய்திகள்

யாழில் தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று (திங்கட்கிமை) முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொற்று...

ஊரடங்கு அமுலில் கஞ்சா மதுபான போத்தல் கடத்திய இருவர் கைது-கல்முனையில் சம்பவம்

பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களை கைது செய்துள்ளதாக கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்த தெரிவித்தார். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட...

பயனாளிகளுக்கு நிவாரண நிதி வழங்கும் சமூர்த்தி

சமூர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம்...

6 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு

நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் இவ்வாறு ஊரடங்கு...

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது

நாடு முழுவதும் அமுல் படுத்த[பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான...

2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் ஓய்வூதியம்

ஓய்வூதியம் எதிர்வரும் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி விசேட செயலணி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) எடுத்த தீர்மானத்திற்கமையவே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. குறித்த நாட்களில் பெற...

வேலையற்ற பட்டதாரி பயிலுனர்கள் அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை

தற்போது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், வேலையற்ற பட்டதாரி பயிலுனர்கள் சுகாதார அலுவலகங்களின் மருத்துவ அலுவலரிடம் அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த செயன்முறை தொடர்பான விவரங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று...

தபால் மூலம் விநியோகம் செய்யப்படும் மருந்து பொருட்கள்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தபால் மூலம் மருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “தாம் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளுக்கு தொலைபேசி...

120 ஆக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 117 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்...

விசேட ஆராதனைகள் அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடி ஒளிபரப்பு

பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ‘கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக...