பிராந்திய செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  பொலிஸார் இன்றையதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் வருகைதந்த வவுனியா பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை …

Read More »

இன்று ஆரம்பிக்கும் ‘புலதிசி’ ரயில் சேவை

கொழும்பு, கோட்டைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ‘புலதிசி’ என்று அழைக்கப்படும் இந்த கடுகதி ரயிலானது 10 புகையிரத நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும். அத்துடன் சுமார் 05.23 மணி …

Read More »

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 11.10 மணியளவில்  டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த …

Read More »

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். விசேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காரணமாக கொழும்பு, காலிமுகத்திடல் வீதியின் லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் …

Read More »

பாவனைக்கு உதவாத தேயிலை கழிவுடன் ஒருவர் கைது

பாவனைக்கு உதவாத தேயிலை கழிவுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து சட்டவிரோதமாக 18 ஆயிரம் கிலோ கிராம் தேயிலை கழிவுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தில் வைத்தே குறித்த நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

‘வடக்கின் தங்கக்குரல்’ –  விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக உயர்வு

விண்ணப்ப முடிவுத்திகதி செப்டம்பர் 30,2019 இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வட மாகாண இளைஞர் யுவதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கின் தங்கக்குரல்  நிகழ்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியின் வயதெல்லை 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண …

Read More »

தேசிய மட்ட தமிழ்த்தின விவாத போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக்கல்லூரிக்கு வெண்கலப்பதக்கம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அகில இலங்கை ரீதியான தேசிய மட்ட தமிழ்த்தின விவாத போட்டியில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியினர் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர். 25 வருடங்களின் பின்னர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டத்தற்கு தெரிவாகியது. கொழும்பு, கல்வி அமைச்சில்  (08)  இடம்பெற்ற தேசிய …

Read More »

யாழ் பல்கலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்து தங்களது பெயர்கள் வராது பாதிக்கப்பட்டோர் …

Read More »

‘கையோடு கூட்டி வாங்க’ நூல் வெளியீடு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அதிபரும் பிரபல கவிஞருமான பாணந்துறை தொட்டவத்தை கஸ்ஸாலி அஷ்-ஷம்ஸ் எழுதிய ‘கையோடு கூட்டி வாங்க’ எனும் கவிதை தொகுப்பின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நீர் கொழும்பு, அல் – ஹிலால் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது. முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். …

Read More »

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி வலைப்பாடு கிராமத்தினருடன் சந்திப்பு

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு கிராம மக்களுடன், வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி தமிழ் மக்கள் பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வலைப்பாடு கிராமத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களது அழைப்பின்பேரில் நேற்று இரவு 7 மணிக்கு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் சென்று கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள். வலைப்பாடு க.தொ.கூ.சங்க நிர்வாகிகள், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகம் மற்றும் சென் ஆன்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள், கிளி/76 பொன்னாவெளி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஜெகமீட்பர் சனசமூக நிலைய நிர்வாகிகள் பங்கேற்றிருந்த இச்சந்திப்பில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழர்கள் தேசமாக அணிதிரள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருந்ததுடன் தமிழ்த்தேசிய அரசியல் போக்கு குறித்தும் மக்கள் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஊடகப்பிரிவு எழுக தமிழ்-2019 தமிழ் மக்கள் பேரவை

Read More »