உலகச்செய்திகள்

ஆஸ்திரேலியா வனாட்டு தீவில் நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 1,750 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தீவு நாடு வனாட்டு. இது புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி …

Read More »

ஈராக் ராணுவ தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி

ஈராக் நாட்டின் அன்பார் மாகாணத்தில் கூட்டுப்படைகள் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் …

Read More »

கிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். …

Read More »

வங்காளதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் பலி

வங்காளதேசத்தில் உள்ள டாக்கா-கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். வங்காளதேசத்தில் உள்ள டாக்கா-கொல்கத்தா நெடுச்சாலையில் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ஃபரிட்பூர் மாவட்டத்தின் உபஜிலா என்ற பகுதியில் உள்ள பாலம் ஒன்றை …

Read More »

அமேசன் காட்டினை காப்பாற்ற போராடும் பழங்குடியினர்

எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என  பிரேசிலி;ன் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை தீட்டியவாறு அம்பு மற்றும் ஏனைய ஆயுதங்களுடன்  …

Read More »

போலந்தில் இடிமின்னல் தாக்கியதில் ஐவர் பலி

போலந்து நாட்டில் இடிமின்னல் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த  சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது. போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் தத்ரா பிராந்தியத்திலுள்ள மலைப்பிரதேச கியோவண்ட் சிகரத்தில் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது …

Read More »

ஹொங்கொங்கில் யூடியூப் கணக்குகள் முடக்கம்

ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வந்த 210 யூடியூப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து யூடியூப் வலைத்தளத்தின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்தின் இணையதள பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஷேன் ஹன்ட்லி கூறியதாவது: ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் …

Read More »

பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ள G7 மாநாடு

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, …

Read More »

புதிய உலக சாதனை படைத்த 88 மாணவர்கள்

பிரித்­தா­னிய பிர்­மிங்ஹாம் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 88 பாட­சாலைச் சிறு­வர்கள்  பியானோ இசைக்­க­ரு­வி­யொன்றை  ஒரே சம­யத்தில் இசைத்து புதிய உலக சாதனை படைத்­துள்­ளனர். பிர்­மிங்­ஹா­மி­லுள்ள சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­தில் கேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த பொறி­யி­யலா­ளர்­களால் வடி­வ­மைக்­கப்­பட்ட விசேட பியானோ இசைக்­க­ரு­வியை  6 வய­துக்கும் …

Read More »

ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் – டிரம்ப்

இந்தியா, ரஷ்யா, துருக்கி போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று அதிபர் டிரம்ப் நிருபர்களை சந்தித்தார். நிருபர்கள் சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் …

Read More »