இலங்கைக்கு எதிராக ஆதரவளித்தமை நியாயமானதே

526

ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை நட்பு நாடாகவே பார்க்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உரிமையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளித்தமை நியாயமானதே என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி டேவிட் டாலி இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE