உலக கோப்பை கால்பந்து: 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சிலி வெற்றி

496
பிரேசிலில் நடந்து வரும் 2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் இன்று ஸ்பெயினை எதிர்கொண்ட சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆரம்பம் முதல் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிலி வீரர்கள் மிக சிறப்பாக கோல்களை அடித்து ஸ்பெயின் வீரர்களை திணறடித்தனர்.

ஆட்டத்தின் பின்னிறுதியிலாவது ஸ்பெயின் வீரர்கள் பதிலடி தருவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில் திறமையாக விளையாடிய சிலி அணி, இலக்கிட்ட ஆட்ட நேரம் முடிவடைந்து, வழங்கப்பட்ட 6 நிமிட உபரி நேரத்திலும் களத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால் உலக கோப்பை போட்டியின் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் ஸ்பெயின் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது.

SHARE