கோரவிபத்தில் 2 விமானிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த 8 பேர் காயமடைந்தனர்

533

H

பாகிஸ்தானில் போர் விமானம் ஒன்று பேருந்து நிலையம் மீது நொறுங்கி விழுந்ததில் விமானி உட்பட 4 பேர் பலியானார்கள். நேற்று பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறிய அவ்விமானம், அருகிலிருந்த கராச்சி புறநகர் பேருந்து நிலையத்திற்குள் விழுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் நொறுங்கின. மேலும், அங்கிருந்த பல கட்டிடங்களும் சேதமடைந்தன.

இந்த கோரவிபத்தில் 2 விமானிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘ விங் கமாண்டர் ஒருவரும், ஸ்குவாட்ரன் லீடர் ஒருவரும் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார். எரிந்து கொண்டிருந்த விமான பாகங்கள் விழுந்ததில் பேருந்து நிலையத்திலும் தீப்பிடித்தது. எனினும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயலாற்றியதால் அங்கு பலத்த சேதம் தவிர்க்கப் பட்டது.

 

SHARE