வட மாகாண சபை அமர்வுக்காக அனந்தி சசிதரன் இன்று சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

409

வட மாகாண சபை அமர்வுக்காக அனந்தி சசிதரன் இன்று சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனந்திக்கான வாகன வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்காத பட்சத்தில் இதனை வெளிக்காட்டவே அனந்தி சைக்கிளில் அமர்வுக்குச் சென்றதாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

7056_765080023549120_7930614901998152089_n

 

10346103_765079976882458_7308587164920613109_n

10410220_765080033549119_8821808972631530927_n

வடமாகாண சபையில் ஐ.நா விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு 3 பிரேரணைகள் முன்மொழிவு

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பினை நிரூபிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு வடமாகாணசபை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிப்பதற்கு மாகாணசபையின் 14ம் அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 10ம் திகதி விசேட அமர்வை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபையின் 14ம் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாணசபை பேரவை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறை ஏற்படுத்தப்படவேண்டும், ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தனது விசாரணை கால எல்லையை நீடிக்க வேண்டும்,  இனப்படுகொலை உட்பட சகல குற்றங்களையும் 1974ம் ஆண்டில் இருந்து விசாரிக்கவேண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ விசாரணை நடத்த அனுமதிக்கப்படவேண்டும் என்ற 3 பிரேரணைகளை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்தார்.

இந்நிலையில் குறித்த பிரேரணைகள் அரசியலமைப்பையும்,  மாகாணசபை உறுப்பினர்கள் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்தை மீறுவதாகவும் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7பேர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர்.

மேலும் ஆழும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் தலமைப்பீடம் சர்வதேச நாடுகளுடன், இராஜதந்திர ரீதியாக முன்னகரும் நிலையில் இந்தப் பிரேரணை அவற்றை மலினப்படுத்தும் என கூறப்பட்டது.

தொதாடர்ந்து பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறித்த பிரேரணையில் குறிப்பிட்டுள்ள விடயங்களில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் இந்தப் பிரேரணையினை கொண்டுவருவதற்கான காலம் இதுவல்ல என சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கமைவாக குறித்த பிரேணைகள் 3ல் கடைசி இரு பிரேரணைகளையும் தான் கைவிடுவதாக சிவாஜிலிங்கம் சபையில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய முதலமைச்சர் குறித்த பிரேரணையினை நிறைவேற்றி அவ்வாறே விசாரணைக்குழுவிற்கு அனுப்புவதால் எவ்விதமான பயனும் இல்லை.

எனவே அதற்குரிய முறையில் தயாரித்து வழங்கினால் என்ன என கேட்டார். அதற்கு ஒத்துக்கொண்ட சிவாஜிலிங்கம் முதலமைச்சரின் கருத்துப்படி நடப்பதாக கூறினார்.

இதற்கமைவாக எதிர் வரும் புரட்டாதி மாதம் இதற்கென விசேட அமர்வு நடத்தப்பட்டு, அதன்போது எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் விசாரணைக்குழுவிற்கு சாட்சியாக வழங்கும் வகையில் ஒரு வரைபை நாம் தயாரித்து அனுப்புவோம் என சபையில் ஆழும் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

TPN NEWS

SHARE