விநாயகர் சதுர்த்தியை குறி வைத்து ரிலீஸ் ஆகும் படங்கள்!

376

ஒரு படத்தை எந்த நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சினிமாக்காரர்களுக்கு தெரியும். அதிலும் குறிப்பாக பண்டிகை கால விடுமுறைகளோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தபடி விடுமுறை வந்தாலோ உடனே அதை மையமாக வைத்து படத்தை ரிலீஸ் செய்து கல்லா கட்டி விடுவார்கள் சினிமாக்காரர்கள். இது நம்மூர் கோலிவுட் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் வரை இதே நிலை தான். அதிலும் ஒருபடம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி, நீண்டநாட்களாக வெளிவராமல் இருந்தால் அந்தப்படம் ரிலீஸாகும் போது ஹிட்டாகிவிடும் என்பது ஒரு நம்பிக்கை. அப்படித்தான் இப்போது தமிழ் சினிமாவில் ரிலீஸ்க்கு தயாராகி நிறைய படங்கள் காத்திருக்கின்றன.
இதில், இந்த சுதந்திர தினத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படம் மட்டும் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்த ஒரு வாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. அதையொட்டி இரண்டு-மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் இதை மையமாக வைத்து ஐந்து முக்கியமான படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதில் கார்த்தி-கத்ரீன் தெரஸா நடித்துள்ள மெட்ராஸ், ஜெயம் ரவி-த்ரிஷா நடித்துள்ள பூலோகம், அதர்வா-ப்ரியா ஆனந்த்-ராய் லட்சுமி நடித்துள்ள இரும்புக்குதிரை, விஜய் ஆண்டனி நடித்துள்ள சீலீம், பார்த்திபன் புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட ஐந்து படங்கள் விநாயகர் சதுர்த்தியை மையமாக வைத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன
SHARE